தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!!

Photo of author

By Divya

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!!

வயிறை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.உணவு உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதை போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.

ஆனால் ஒரு சிலர் வார்தத்தில் 3 அல்லது 4 முறை மட்டுமே மலம் கழிப்பார்கள்.சிலருக்கு எவ்வளவு முக்கினாலும் மலம் வெளியேறுவது கடினமாகும்.சிலருக்கு உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்காது.இதனால் குடலில் மலக் இறுகி போய்விடும்.இவ்வாறு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அவை உடல் நலத்தை பாதித்து விடும்.

தேவையற்ற கழிவுகளை வெளியேற்றாமல் அடக்கி வைத்துக் கொண்டே இருந்தால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாறத் தொடங்கி விடும்.இந்த மலச்சிக்கல் பாதிப்பை வீட்டு முறையில் சரி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் தண்ணீர்
2)எலுமிச்சம் பழ சாறு
3)விளக்கெண்ணெய்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் அளவு தேங்காய் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 2 தேக்கரண்டி எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலக்கவும்.

பிறகு அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய் விட்டு கலந்து குடிக்கவும்.இரவு தூங்கச் செல்வதற்கு முன் அல்லது காலையில் எழுந்ததும் இதை குடித்தால் மலக் குடலில் தேங்கிய மலம் இறுகி வெளியேறி விடும்.