Breaking News

உங்களுக்கு முழுமையான ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இவற்றை செய்து வந்தாலே போதும்! 

உங்களுக்கு முழுமையான ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இவற்றை செய்து வந்தாலே போதும்! 

தூக்கம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. ஆனால் இன்று மாறி வரும் சூழ்நிலைகள் காரணமாக தூக்கம் என்பது பலருக்கும் எட்டா கனியாகி விட்டது. அப்படியே தூக்கம் வந்தாலும் அது ஆழ்ந்த முழுமையான தூக்கம் அல்ல.

தூக்கம் ஒரு மனிதனின் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் நன்றாக உறங்கி எழுந்தால் தான் நமது உடல் நலம் மனநலம்  இரண்டும் நன்றாக இருக்கும்.

பொதுவாக  ஆழ்ந்த தூக்கம் வேண்டுமெனில் சில செயல்களை செய்து வந்தாலே போதும். நமக்கு நிம்மதியான தூக்கம் நிச்சயம்.

1. தூங்குவதற்க்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக டீ காபி போன்ற பானங்களை அறவே தவிர்க்கவும்.

2. இரவு அதிக உணவை உண்ண வேண்டாம்.

3. தூங்குவதற்கு முன்பு புகை பிடிக்க வேண்டாம்.

4. எப்பொழுதும் தூங்குவதற்கு ஒரு இடத்தையும் படுக்கையையும் தயார் செய்து வைக்க வேண்டும். ஆனால் அங்கே சாப்பிடுவது, விளையாடுவது, படிப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது.

5. பகலில் தூக்கம் வேண்டாம்.

6. தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் ஸ்கிரீன் டைம் ( டிவி, கணினி, செல்போன்) தவிர்க்கவும்.

7. உங்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்தால் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

8. உங்களது அன்றாட வேளையில் நிலையான ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் தூக்கம், எழுதல், உடற்பயிற்சி நேரம் எல்லாமே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும்.