பளிச்சென்று முகம் மாற வேண்டுமா! கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
46
#image_title

பளிச்சென்று முகம் மாற வேண்டுமா! கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்!!

நம்முடைய முகம் பளிச்சென்று மாறுவதற்கு இந்த பதிவில் கற்றாழையுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கற்றாழையில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. கற்றாழையை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகத்தில் உள்ள தோல் சுருக்கம், கரும்புள்ளிகள், கருவளையம், முகப்பருக்கள் போன்ற சருமம் பிரச்சனைகளை சரி செய்கின்றது.

இந்த பதிவில் கற்றாழையுடன் தேன், எலுமிச்சை, சர்க்கரை ஆகிய மூன்று பொருட்கள் பயன்படுத்தி எவ்வாறு முகத்தை பளிச்சென்று மாற்றுவது என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை…

கற்றாழை ஜெல்லுடன் நாம் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகம் பளிச்சென்று மாறுகின்றது. அதே போல முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தையும் நீக்கி விடுகின்றது. எனவே ஒரு சிறிய பவுலில் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழிந்து முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

கற்றாழை மற்றும் தேன்…

கற்றாழை மற்றும் தேனை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. எனவே ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் கழிந்து முகத்தை கழுவி விடலாம்.

கற்றாழை மற்றும் சர்க்கரை…

நாம் முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு கற்றாழையுடன் சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு பவுலை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இந்த பேக்கை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடம் கழிந்து முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து முகம் பளிச்சென்று மாறும்.