உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க!

0
174

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க!

மாதுளம் பழத்தை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

 

மாதுளம் பழச்சாறு உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்பு, பொட்டாசியம், ஜிங்க் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மாதுளை சாறு உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்கி, இரத்தம் உருவாகும் செயல்முறையை அதிகரிக்கிறது. எனவே மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலின் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.இரத்த சோகையால் அவதிப்படும் நபர்கள், தொடர்ந்து ஒரு மாதத்திற்கு தினமும் மாதுளை சாறு குடிப்பது நல்லது. ஏனெனில் இது சோர்வை நீக்கி சக்தியை மீட்டெடுக்கும்.உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் மாதுளை சாறு அருந்தலாம். குறிப்பாக குளிர்காலத்தில் மாதுளை சாறு தினமும் உட்கொள்ள வேண்டும். மாதுளம் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சருமத்திற்கு நல்லது. மாதுளம் பழச்சாற்றை தினமும் குடித்து வந்தால் பளபளப்பான சருமத்தை பெறலாம்.மேலும் மாதுளம் பழ சாறு இரத்தத்தை சுத்திகரிப்பதால், முகத்தில் பருக்கள் மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.

மூட்டுவலியைப் போக்க உதவுவதால், மூட்டுவலி நோயாளிகளுக்கு இது நன்மை பயக்கும். மாதுளை சாறு உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் வயிறு தொடர்பான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. மற்ற பழச்சாறுகளுடன் ஒப்பிடும்போது மாதுளை சாறு அதிக ஆக்ஸிஜனேற்ற அளவைக் கொண்டுள்ளது. ரெட் ஒயின் மற்றும் கிரீன் டீயில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட்களை விட மூன்று மடங்கு அளவு மாதுளையில் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ

ரேடிக்கல்களை அகற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இதுதவிர, மாதுளையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

Previous articleஇந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!
Next articleகுட் நியூஸ்! சொத்துவரி கட்ட இனி நீங்க அலைய வேண்டாம்! உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்க!