இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!

0
105

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!

நம்மில் பலரும் குபேரன் – சிரிக்கும் புத்தர் சிலை இரண்டுமே ஒன்று தான் என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் குபேரனுக்கும் சிரிக்கும் புத்தர் சிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீனாவில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்தின் பொருளாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை குறிக்கிறது பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும். புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். சிரிக்கும் புத்தர் 10 ஆம் நூற்றாண்டின் சீன துறவி, புடாய் என்று நம்பப்படுகிறார்.

ஆனால் எந்த நோக்கத்தை நிறைவேற்ற, எந்த வகை சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைக்க வேண்டும். சந்தையில் பல வகையான சிரிக்கும் புத்தர் பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் அளவுகளில் கிடைக்கிறது. எனினும் பணம் தொடர்பான சிக்கல்களுக்கு எந்த சிலையை வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

உங்கள் வணிகம் சரியாக நடக்கவில்லை என்றால், உங்கள் நிதி நிலை சீரற்றதாகவே இருக்கும், அதாவது பணத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டால், உங்கள் கடை அல்லது அலுவலகத்தில் இரு கைகளையும் உயர்த்தி சிரிக்கும் புத்தர் சிலையை வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

author avatar
CineDesk