உடலை பூ போல் மிருதுவாக வைத்துக் கொள்ள ஆசையா? அப்போ இதை மட்டும் தினமும் பயன்படுத்துங்கள்!

0
199
#image_title

உடலை பூ போல் மிருதுவாக வைத்துக் கொள்ள ஆசையா? அப்போ இதை மட்டும் தினமும் பயன்படுத்துங்கள்!

உடல் அதிக மிருதுவாக இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இதற்காக தினமும் ரோஜா சோப் பயன்படுத்துவது நல்லது. இதனால் மேனி மிகவும் மிருதுவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ரோஜா இதழ் – 1 கைப்பிடி அளவு
2)சோப் பேஸ் – 1 கப்
3)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
4)சோப் மோல்ட் – 1

செய்முறை…

முதலில் ஒரு கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா இதழை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக்கி கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதன்மேல் ஒரு பாத்திரம் வைத்து டபுள் பாய்லிங் முறைப்படி சோப் பேஸ் போட்டு கொதிக்க விடவும்.

இந்த சோப் பேஸ் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு அதில் அரைத்த பன்னீர் ரோஜா இதழ் சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும். தொடர்ந்து 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த பன்னீர் ரோஜா கலவையை ஒரு சோப் மோல்டில் ஊற்றவும். இதை ப்ரிட்ஜில் 8 மணி நேரம் வைக்கவும். ப்ரிட்ஜில் இல்லாதவர்கள் நிழலில் 8 மணி நேரம் காய வைக்கவும்.

இந்த ரோஜா சோப்பை மேனிக்கு பயன்படுத்தி வந்தால் மேனி அதிக மிருதுவாகவும், நறுமணத்துடன் இருக்கும்.

Previous article1 நாளில் இந்த வறட்டு இருமலை போக்க இதனை ஒரு முறை மட்டும் குடியுங்கள்!!
Next articleவழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு – இதை எவ்வாறு பயன்படுத்துவது?