கேரள பெண்களை போல் முகம் மினுமினுப்பாக வைத்திக்கொள்ள ஆசையா? அப்போ இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

0
263
#image_title

கேரள பெண்களை போல் முகம் மினுமினுப்பாக வைத்திக்கொள்ள ஆசையா? அப்போ இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

அழகு என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு சொல்.பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகின்றனர்.முகம் வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று எண்ணி பல பெண்கள் இரசாயன பொருட்களை உபயோகித்து வருகின்றனர்.இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர்.

சருமத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரசாயன பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் கேரள பெண்களைப் போல் முகம் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும்.இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

*அரிசி மாவு – 2 தேக்கரண்டி

*பால் – தேவையான அளவு

*கோதுமை மாவு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 2 தேக்கரண்டி பச்சரிசி மாவு,1 தேக்கரண்டி அளவு கோதுமை மாவு சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் தேவையான அளவு பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை தாயார் செய்து கொள்ளவும்.

இதை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் போட்டு நன்கு அப்ளை செய்து கொள்ளவும்.

20 அல்லது 30 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகம் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும்.

இந்த ரெமிடி செய்வதற்கு உபயோகித்த பச்சரிசி மாவு சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.அதேபோல் கோதுமை மாவு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க உதவுகிறது.இறுதியாக பால் முகத்தில் இருக்கும் கருமையை நீக்கி பொலிவுற செய்ய உதவுகிறது.