பனி காலத்தில் சருமம், உதடு, பாதம் மிருதுவாக இருக்க ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!
1)தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி வந்தால் பனி காலத்தில் ஏற்படும் சரும வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
2)நெய்யை உதடுகளில் தடவி வர உதடு காயாமல் இருக்கும்.
3)குளிக்கச் செல்வதற்கு முன் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து கொண்டு பின்னர் குளித்தால் சருமம் காயாமல் மிருதுவாக இருக்கும்.
4)தேன் மெழுகை உருக்கி ப்ரிட்ஜில் வைத்து பின்னர் சருமத்தில் அப்ளை செய்து வந்தால் சருமம் அதிக மிருதுவாக இருக்கும்.
5)வேப்பிலையை அரைத்து உடலில் பூசி குளித்தால் மேனி சாஃப்டாக இருக்கும்.
6)தேங்காய் எண்ணெயில் மஞ்சள் சேர்த்து காய்ச்சி பாத வெடிப்பில் தடவி வந்தால் வெடிப்பு மறையும்.
7)ஆரஞ்சு பழ தோலை உலர்த்தி பொடியாக்கி தண்ணீர் கலந்து முகத்தில் பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
8)கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தி வரலாம்.
9)மருதாணி இலையை அரைத்து பாத வெடிப்புகளில் பூசி வந்தால் வெடிப்பு குறையும்.
10)ரோஜா இதழை அரைத்து தேன் கலந்து உதடுகளில் பூசி வந்தால் உதடு காயாமல் இருக்கும்.