குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைக்க வேண்டுமா! இந்த பானங்களை குடிங்க!!
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாம் நம்முடைய உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்னென்ன வகையான பானங்கள் அருந்த வேண்டும் என்பது தொடர்பாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பலகாலம் தொடங்கி விட்டாலே குளிர்காலம் தொடங்கிய விடும். அந்த வகையில் தற்பொழுது மழை காலமும் குளிர்காலமும் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் நாம் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட பானங்கள் எதுவும் அருந்தக் கூடாது. அவ்வாறு அருந்தினால் சளி, இருமல் போன்ற நோய் தொற்றுகள் நம் உடலை தாக்கும். இந்த நேரத்தில் நாம் சூடான அதே சமயம் ஆரோக்கியம் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும்.
அந்த வகையில் குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள அருந்த வேண்டிய பாகங்களில் சில…
* குளிர்காலத்தில் உடலை நாம் கதகதப்பாக வைத்துக் கொள்வதற்கு பாலில் குங்கமப்பூ கலந்து காய்ச்சி குடிக்கலாம்.
* குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக சூடான பாலில் பாதாம் பருப்புகளை தட்டி அதில் சேர்த்து அந்த பாலை நாம் பருகலாம். அல்லது பாலில் பாதாம் பருப்புகளை தட்டி சேர்த்து அதை கொதிக்க வைத்துகூட நாம் குடிக்கலாம்.
* குளிர்காலத்தில் நம் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள பட்டை மற்றும் ஏலக்காயை வைத்து டீ தயார் செய்து குடிக்கலாம்.
* அதே போல மிளகு, லவங்கம், ஜாதிக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் பயன்படுத்தி டீ தயார் செய்து குடிக்கலாம்.
* குளிர்காலத்தில் நமது உடலை கதகதப்பாக வைத்துக் கொள்வதற்கு சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம். இதை விட நோய் எதிர்ப்பு மருந்து கடைகளில் கூட கிடைக்காது.
* குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்வதற்கு நாம் மூலிகை கசாயம் கூட தயார் செய்து குடிக்கலாம்.
இந்த ஆறு வகையான சூடான பானங்களை நாம் அருந்தும் பொழுது குளிர்காலத்தை தாங்கள் கூடிய ஆற்றல் நம் உடலுக்கு கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்புச் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுக்கள் நம்மை நெருங்காது. மேலும் நமக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுக்கள் நமக்கு ஏற்பட்டாலும் விரைவில் குணமடையும்.