தலை முடி நீளம் இடுப்பிற்கு கீழ் இருக்க ஆசையா..? அப்போ இந்த 3 பொருள் ஹேர் பேக்கை தலைக்கு அப்ளை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

தலை முடி நீளம் இடுப்பிற்கு கீழ் இருக்க ஆசையா..? அப்போ இந்த 3 பொருள் ஹேர் பேக்கை தலைக்கு அப்ளை செய்யுங்கள்!!

பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை, உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் சாதாரண ஒன்றாகிவிட்டது.

இதற்காக பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டாலும் பலன் கிடைத்தபாடு இல்லை. தினமும் ஒரு வழிகளை பின்பற்றி அழுத்துப்போன உங்களுக்கான ஒரு அற்புத மூலிகை எண்ணெய் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பது மிகவும் சுலபம் அதே சமயம் கிடைக்கும் பலன் அதிகம்.

தேவையான பொருட்கள்:-

*கசகசா – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*தேங்காய் துருவல் – 1 கப்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கசகசா மற்றும் 1 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு 1/2 மூடி தேங்காயை துருவல் கொண்டு நன்கு துருவி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்துள்ள கசகசா மற்றும் வெந்தயத்தை சேர்த்து அரைக்கவும். அடுத்து 1 கப் தேங்காய் துருவலை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துவதற்கு முன்னர் தலைமுடி எண்ணெய் இல்லாமல் இருக்க வேண்டும். பின்னர் இந்த ஹேர் பேக்கை தலைக்கு அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு வழக்கம் போல் பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி தலை முடியை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்தில் 2 முதல் 3 நாட்களுக்கு செய்து வருவதன் மூலம் தலை முடி கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.