பற்கள் பளிச்சென்று ஆக வேண்டுமா!!? அப்போது தினமும் இரவு இந்த பழத்தை சாப்பிடுங்க!!!

0
123
#image_title

பற்கள் பளிச்சென்று ஆக வேண்டுமா!!? அப்போது தினமும் இரவு இந்த பழத்தை சாப்பிடுங்க!!!

நம்முடைய பற்கள் பளிச்சென்று மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொண்டு பற்களை கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து பற்களை பளிச்சென்று மாற்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.

நம்முடைய பற்கள் பளிச்சென்று மாறுவதற்கு வேண்டும் என்றால் நாம் இரவில் சாப்பிடக் கூடிய பழம் ஆப்பிள் ஆகும். ஆம் ஆப்பிள் பழத்தில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆப்பிளை நாம் தெரிந்து சாப்பிட்டு வரும்பொழுது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள் அதிக அளவில் கிடைக்கின்றது.

மேலும் ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்துக்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றது. ஆப்பிளை தினமும் இரவு சாப்பிடுவது மூலமாக பற்களில் உள்ள கிருமிகளை அழித்துவிட முடியும்.

ஆப்பிளின் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இது நமக்கு ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல் முதலான பாதிப்புகள் வராமல் தடுக்க உதவி செய்கின்றது. மேலும் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி விடுகின்றது.

ஆப்பிளை நாம் தினமும் சாப்பிடுவதால் இது நமது சருமத்திற்கும் பல பயன்களை தருகின்றது. வறண்டு கடினமாக இருக்கும் சருமத்தை மென்மையாகவும் மெருதுவாகவும் மாற்றி பொலிவுறச் செய்வதில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஆப்பிளின் தோலை எடுத்து இதனுடன் தேன் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து தேநீர் தயாரித்து குடித்து வரலாம். இதன் மூலமாக நமக்கு உடல் ஆரோக்கியம் பெறும். பற்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

பற்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பிளின் பயன்பாடு…

நாம் பற்களை ஆரோக்கியம் வைத்துக் காப்பாற்றுவது பல வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். விதவிதமான பற்பசைகள், விதவிதமான வாய் கொப்பளிப்பு மருந்துகள், மாத்திரைகள் என்று பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவ்வாறு பற்களை ஆரேக்கியமாக வைத்துக் கொள்ளை பலவிதமான வழிமுறைகளை. பின்பற்றும் அனைவருக்கும் ஆப்பிள் சிறந்த ஒரு தீர்வை தரும்.

பற்களை ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் வைத்துக் கொள்வதற்கு தினமும் நாம் இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு ஆப்பிள் பழத்தை பற்களால் மென்று சாப்பிட வேண்டும்.

அவ்வாறு இரவில் ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ஆப்பிள் பழத்தில் உள்ள மாலிக் ஆசிட் நம் பற்களை இரவு நேரத்தில் கிருமிகள் அண்டாமல் பாதுகாத்து கிருமிகளை அழித்து நம் பற்களை சுத்தம் செய்து விடும். எனவே நோய்க்கிருமிகள் அழிந்து விடுகின்றது. இதனால் பற்கள் ஆரோக்கியமாகும். இதை தினமும் செய்து வந்தால் பற்களில் உள்ள அனைத்து கட்சிகளும் மாலிக் ஆசிட் மூலம் அழிந்துவிடும். அதன் பின்னர் பற்கள் அனைத்தும் பளிச்சென்று மாறி விடும்.

Previous articleதெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!
Next articleஆடம் ஜாம்பாவின் சிறப்பான பந்துவீச்சு!!!  முதல் வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா!!!