தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ!

Photo of author

By Sakthi

தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ!

நம்மில் சிலருக்கு தொடையின் இடுக்குகளில் சிறிய புண் போல ஏற்பட்டு அதுவே நாட்கள் செல்ல செல்ல அரிப்பாக மாறிவிடும். அந்த அரிப்பு பிற்காலத்தில் தோல் முழுவதும் பரவி தோல் அரிக்கத தொடங்கும்.

இதற்கு காரணம் தொடைகளில் ஈரத்தன்மை இருப்பது தான். ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் இந்த புண் விரைவில் ஆறாது. இந்த புண் ஆற ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும். ஆனால் மீண்டும் இந்த புண் ஏற்பட்டு அரிப்பு அதிகமாகும் இதற்கு இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு மருந்து தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* கருஞ்சீரகம்
* கஸ்தூரி மஞ்சள்
* சாதாரண மஞ்சள்
* தேங்காய் பால்

செய்முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து பின்னர் அதில் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் கரீஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் மூன்றையும் தேங்காய் பாலில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தேங்காய் பாலில் உள்ள தண்ணீர் வந்தும் வரை அதை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வற்றி எண்ணெய் பதம் வந்ததும் இறக்கி விட வேண்டும்.

பின்னர் இதை தொடைப் பகுதிகளில் அரிப்பு உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். தொடர்ந்து இதை பயன்படுத்தினால் அரிப்பு பிரச்சனையே இருக்காது. முற்றிலும் குணமடைந்து விடும்.