பபுள்கம்மை முழுங்கினால் செரிமானமாக 7 வருடம் ஆகுமா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
பபுள்கம் சூயிங் கம் என்றாலே குழந்தைகள் மட்டுமல்ல இளம் வயதினர் முதல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை இனிப்பு சுவை கொண்ட பசை. இது கூல்மின்ட் போன்ற பல்வேறு சுவை விருப்பங்களில் வருவதால் வாய் புத்துணர்ச்சிக்காக பெரியவர்கள் சூயிங் கம் மெல்லும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு இதனை பெற்றோர்கள் வாங்கி கொடுப்பதில்லை. ஏனெனில் அந்த பசையை தெரியாமல் குழந்தைகள் விழுங்கி விடுவார்கள் என்பதால் தான் .மேலும் குழந்தைகள் அதனை சாப்பிடக்கூடாது என்பதற்காக பல கட்டுக் கதைகளை கூறுவர்.
பபிள் கம்மை விழுங்கி விட்டால் செரிமானம் ஆவதற்கு சுமார் ஏழு வருடங்கள் ஆகும் என்றும் அதுவரை சூயிங் கம் வயிற்றில் அப்படியே இருக்கும் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம் அனைவரையும் பயமுறுத்துவதற்கு இந்த கட்டுக் கதைகள் போதுமானதாக இருந்த போதிலும் இந்த கருத்துகள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பது தான் உண்மை.
சூயிங் கம் விழுங்கும் போது என்ன நடக்கும்? சூயிங் கம் என்பது ஒரு வகை ஒட்டக்கூடிய எலாஸ்டிக் பொருளாகும். நீங்கள் அவற்றை மணிக்கணக்கில் மெல்லலாம் ஆனாலும் அவற்றின் அளவுகளில் எந்த மாற்றங்களையும் நீங்கள் காண மாட்டீர்கள். இதன் காரணமாகவே அதை விழுங்கும் போது வயிற்றுப் பகுதியில் வெகு நேரம் செரிமானம் ஆகாமல் இருக்கும் என்றும் குடலில் அடைப்பு ஏற்பட வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது .உண்மையில் நமது உடலில் சூயிங் கம் ஜீரணம் ஆகாது. எனவே நம் வயிற்றில் கம் அப்படியே இருக்கிறது. ஆனால் நாம் உண்ணும் மற்ற உணவுகளை போலவே இது செரிமான அமைப்பு வழியாக நகர்ந்து உடலில் இருந்து மலத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இது குடலில் அடைப்புக்கு வழி வகுக்குமா? இந்த மெல்லும் பசை கட்டாயம் குடல் அடைப்புக்கு வழிவகுக்கும்.ஆனால் இது மிகவும் அரிதாகவே நடக்கிறது. ஒரு நபர் அதிக அளவு மெல்லும் பசை விழுங்கும் பட்சத்தில் அவை குடல் அடைப்புக்கு வழி வகுக்கும்.இதனால் ஒருவர் மலச்சிக்கல் பிரச்சனையால் கூட பாதிக்கப்படலாம்.இது பெரும்பாலும் குழந்தைகளின் விஷயத்தில் நிகழ்கிறது.