இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? – ஷேவாகிற்கு விஷ்ணு விஷால் பதிலடி!!

0
54
#image_title

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? – ஷேவாகிற்கு விஷ்ணு விஷால் பதிலடி

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாகிற்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி20 மாநாடு குறித்த அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை பாரத் என்று மாற்றுமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனால், கொதித்தெழுந்த நெட்டின்கள் பயங்கரமாக ஷேவாக்கை தாக்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை பூதாகரமானதாக வெடித்ததால், இது குறித்து ஷேவாக் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இது என் தேசம். என் தேசத்தை பாரத் என்று அழைக்க நான் விரும்புகிறேன். ஆனால், இதை அரசியலோடு ஒப்பிட்டு பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. எந்த அரசியல்வாதிக்கும் நான் ரசிகன் கிடையாது என்று காட்டமாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரது கண்டனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் ஷேவாக்கின் இந்த கருத்து தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன்… இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான பதிவு இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் விஷ்ணு விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Gayathri