கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். இதனால் உலகம் முழுவதும் இதன் பாதிப்பு அதிகமானது. தற்போது உலகம் முழுவதும் வைரசால் மிரண்டுள்ளது. கொரோனா வைரசை விரட்டுவதற்கு உலகம் முழுவதும் போராடி வருகிறது. இந்நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோசு அதானோம் காணொலி காட்சி மூலம் பேசியுள்ளார். அதில் “கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தைக் காட்டுவது மிகவும் தவறானதாகும். சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது. கொரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.