இனி லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்காதீர்கள்!! இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!!
நம் நாட்டில் ஏராளமானோர் அரசு வேலைகளை சுயமாக பெறாமல் பணத்தின் மூலம் லஞ்சம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர். இதில் சிலர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டு செல்கின்றனர்.
பொதுவாக இப்படி லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலை வாங்குவது குற்றமாகும். எனவே படித்து தேர்வாகி அரசாங்க வேலை வாங்குவதே சிறந்தது. நிறைய பயிற்சி முகாம்கள் இதற்கென்று செயல்பட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் கோவையில் இருக்கக்கூடிய shiksha by swathika என்ற IAS அகாடமி. அதில் அரசாங்க வேலைக்கு படித்து வேலை பெற விரும்புபவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதில் சொல்லித் தரும் ஆசிரியர்களாக TNPSC யில் தேர்வானவர்கள் பயிற்சி கொடுக்கிறார்கள்.
படிப்பதற்கு வயதும் தூரமும் தடையாக இருக்கக் கூடாது என்று கூறி இவர்கள் இணையதளத்தில் அனைவருக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களின் இணையதளத்தில் இதுவரை இதில் பயிற்சி பெற்று எத்தனை பேர் தேர்வாகியுள்ளனர் எத்தனை பேர் பணியில் அமர்ந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களை அறிய இவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். இதேபோல் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும்போது நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும்.
அதாவது, நாம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆட்சேர்ப்பு முகவர் அதாவது recruiting agent மூலமாக வேலைக்கு செல்கிறோம் என்றால் இவருக்கு 30000 க்கு மேல் தொகையை வழங்கக் கூடாது.
ஒருவேளை அந்த நபர் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டார் அல்லது 30 ஆயிரத்துக்கு மேல் பணம் கேட்கிறார் என்றால் இந்த 1800113090 எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். மேலும் pravasi bharatiya bima yojana என்ற திட்டம் ஒன்று உள்ளது.
இதில் வெளிநாட்டிற்கு வேலை செல்பவர்களுக்கு அங்கு ஏதேனும் நடந்து விட்டால் 10 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இந்த இழப்பீட்டுத் தொகை தொழிற்சாலையில் வேலைக்கு செல்பவர்கள், வீட்டு வேலைக்கு செல்பவர்கள், விவசாயம் செய்பவர்கள், மெக்கானிக் செவிலியர் டிரைவர் போன்ற குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்கு மட்டுமே உரிய திட்டம் ஆகும்.