தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

0
175

கொரோனா இரண்டாவது அலையில் அதிகமாக சந்தேகங்களுக்கு ஆளாகிறோம், சாதாரண பிரச்சினைக்கு மனம் பதறி விடுகிறது. தொற்று நோய் தடுப்பு அரசு சிறப்பு மருத்துவக் குழுவின் தொற்றுநோயியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவை பின்வருமாறு

 

1. துணியால் கட்டப்பட்ட மாஸ்க் பாதுகாப்பானதா?

 

N-95 வகையான மாஸ்க்குகள் மருத்துவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. சாதாரண மக்கள் இரண்டு அல்லது மூன்று அடுக்கு கொண்ட பஞ்சு மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம்.

 

2. ஆவி பிடித்தல் நல்லதா?

 

மருத்துவ ரீதியாக ஆவி பிடித்தல் கொரோனாவை அளிக்கும் என்பதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை. உங்களுக்கு ஆவி பிடித்தல் இதம் அளிக்கிறது என்றால் அதனை செய்யலாம். ஆனால் அதற்கு முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

 

3. குப்புற படுத்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்குமா?

 

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த குப்புற படுத்தல் மற்றுமொரு பக்கம் சாய்ந்து படுத்தல் ஆகியவை உதவி செய்யும். நுரையீரலுக்கு அழுத்தம் கொடுப்பதனால் ஆக்சிஜன் அளவை சீர் படுத்தும். நீண்ட நேரம் குப்புறபடுத்தல் மற்றும் ஒரு பக்கம் சாய்ந்து படுத்தல் மூலம் ஆக்சிஜன் தேவை சீராகும்.

 

4. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எத்தனை நாள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

 

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் இன்னும் ஒரு முறை கூட தடுப்பூசி போடவில்லை எனில் 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இல்லை ஏற்கனவே ஒரு டோஸ் போட்டு கொண்டு இருந்தால் 2 அல்லது 3 மாதங்கள் கழித்து அதே டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொள்ளும்போது, கோவேக்சினை 4 வார இடைவெளி விட்டு எடுத்து கொள்ளவும், கோவிஷீல்டை 12 வார இடைவெளி விட்டு எடுத்து கொள்ளவும். இப்படி எடுத்து கொண்டால், கொரோனாவுக்கான நோய் எதிர்ப்புத் திறன் உருவாகும் .

 

5. கர்ப்பிணிகள் – பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

 

இந்தியாவில் இன்னும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படவில்லை. கொரோனா வின் பாதிப்புகளை ஒப்பிடும்பொழுது கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டால் பாதிப்புகளின் விளைவுகள் குறைவானதாக உள்ளது என்று சோதித்து உள்ளது. ஆனால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இந்தியாவில் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

 

6. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மது அருந்தலாமா, இறைச்சி சாப்பிடலாமா?

 

தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் கண்டிப்பாக இரண்டு நாட்களுக்கு மதுவைத் தொடக் கூடாது. அப்படி மது அருந்தினால் கொரோனாவில் தடுப்பூசி செயல்திறனை பாதிக்கும். இதனால் பல்வேறு பக்க விளைவுகள் வரலாம். இறைச்சி சாப்பிட்டால் பக்க விளைவுகள் வரும் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை. உடல் நிலையைப் பொறுத்து உண்ணலாம்.

 

7. மருத்துவ ரீதியாக, பொதுமுடக்கம் அவசியம்தானா?

 

கண்டிப்பாக அவசியம். பொது முடக்கத்தால் திடீரென்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறையும் வாய்ப்புள்ளது என்பதால் பொது முடக்கம் கண்டிப்பாக பலன் அளிக்கும்.

 

8. கொரோனா தடுப்புக்கு, ஒவ்வொரு தனிமனிதனும் என்ன செய்ய வேண்டும்?

 

முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது. அரசின் ஊரடங்கு மதித்து நடப்பது. சளி, காய்ச்சல், இருமல், வாந்தி ,உடல் வலி, பேதி ஆகியவை இருந்தால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்வது.

 

ஆக்சிஜன் அளவு 94 சதவிகிதத்தை விட குறைவாக வந்தால் மட்டும், மருத்துவமனையில் சேரவும். தடுப்பூசி மறக்காமல் போட்டுக்கொள்வது.

 

இவ்வாறு நேர்காணலின் மூலம் மருத்துவர் மருத்துவர் வி.ராமசுப்ரமணியன் விளக்கினார்.

 

 

 

 

Previous articleஎனக்கு இரவில் தூக்கம் வரல! இப்படியும் ஒரு பள்ளியா? கிரிக்கெட் வீரர் ட்வீட்!
Next articleமாத்திரை வாங்கும்போது கண்டிப்பா இதை கவனிங்க!! இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம்!!