மாத்திரை வாங்கும்போது கண்டிப்பா இதை கவனிங்க!! இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம்!!

0
89

நாம் அனைவரும் அன்றாடம் ஏதோ ஒரு உடலில் உள்ள பிரச்சனைக்காக மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். சிலர் மருத்துவரிடம் சென்று ஆலோசித்து பின் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். மற்றொரு பக்கம் நேரடியாக மருந்து கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையை சொல்லி மருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் எவை நல்லது? அப்படி என்று ஒரு சிலர் பார்ப்பதில்லை. அப்படி மருந்து அட்டைக்கு பின்னர் என்ன உள்ளது என்பதை யாரும் பார்ப்பதில்லை. மருந்து அட்டையின் பின் உள்ள பல குறியீடுகளின் அவசியம் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

​​கொரோனோவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் தொற்று நோய்கள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதே போல் அனைத்து விலையும் அதிகமானது.

 

 

நோய் பாதித்தவர்கள் கூட அருகில் உள்ள மருந்து கடையில் சென்று சாதாரண நோய்க்கான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். அறிகுறிகள் ஒத்துப் போய் இருந்தாலும் மருத்துவரிடம் சென்று முழுமையாக பரிசோதித்த பின்னர் தான் மாத்திரைகளை உண்ண வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்கு எந்த ஒரு கேடும் வராது.

 

அப்படி நீங்கள் வாங்கும் மாத்திரைகள் அனைத்தும் தரமானவையா? எடுத்து கொள்ளலாமா? என்று எப்போதாவது நீங்கள் பரிசோதித்து உள்ளீர்களா!! இல்லை! மருத்துவரின் ஆலோசனையை இருந்தாலும் சரி இல்லாமல் மருந்து கடைகளில் வாங்கும் மருந்து அட்டைகளாக இருந்தாலும் சரி மருந்து அட்டையை முதலில் பாருங்கள். அதில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள்.

 

 

மிக முக்கியமான இன்னொன்று உள்ளது. மருந்து அட்டைக்கு பின்னால் சிவப்பு நிற கோடு உள்ளதா? என்று பரிசோதித்துப் பாருங்கள். இப்படி சிவப்பு நிற கோடு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்றி அந்த மாத்திரையை தொடாதீர்கள். இது ஆன்ட்டி பயோட்டிக் அதிகமாக உள்ளதை குறிக்கிறது. அதிகமாக உட்கொள்வதும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் மாத்திரைகளை வாங்கி உண்ணுங்கள்.

 

 

author avatar
Kowsalya