கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!!

0
204

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!!

இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது.

நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பினாலும், உங்கள் கனவு இல்லத்தை வாங்க விரும்பினாலும், புதிய தொழில் முயற்சியைத் தொடங்கினாலும் அல்லது உங்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும் கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது.

ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்னைத்தான் மலை போல நம்பி வந்திருக்கிறேன்.

தயவுசெய்து இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே என்று உங்களது நண்பரோ அல்லது உறவினரோ கண்கள் கலங்கியபடி, கைகளைப் பிசைந்து கொண்டு உங்கள் முன் கூனி குறுகி நிற்கும் போது இரக்கப்பட்டு நீங்கள் உங்கள் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து அவர்களுக்கு உதவியிருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு வாங்க முடியாமல் இருக்கும் நிலை ஏற்படும்.
அதனை இனி சட்டத்தின் வாயிலாக சுலபமாக வாங்கிவிடலாம்.

Negotiable instrument act section 4
அமைப்பின்படி கடன் உறுதி சீட்டு
இதில் ஒருவருக்கு கொடுத்த பண மதிப்பு மற்றும் எப்பொழுது கொடுக்கப்பட வேண்டும் என்ற தேதி உள்ளிட்ட தகவல்களை அந்த நபரிடம் இருந்து எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.

இதில் கடன் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் பண மதிப்பு கையொப்பம் போன்றவைகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
எதற்காக கடன் வாங்குகிறார்கள் என்ற தகவலும் வட்டி வாங்கப்படுகிறது என்றால் அது ஆண்டிற்கு பெரும் பனிரெண்டு சதவீதமாக மட்டும்தான் இருக்க வேண்டும்.

இந்த கடன் உறுதி சீட்டு மூலம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து இருக்கலாம் மற்றும் வாங்கிக் கொள்ளலாம்.

அவ்வாறு கடன் வாங்கியவர் கடன் கொடுக்கவில்லை என்றால் கோர்ட்டில் சென்று நாம் அவர் மீது மனு போடலாம். இவ்வாறு மனு போடுவதால் ஆகும் செலவு மற்றும் கோட்டிற்கு போய்வரும் போக்குவரத்து செலவு என்று அனைத்து செலவுகளையும் கடன் வாங்கிய நபரே சட்டத்தின் வழி திருப்பித் தர வேண்டும்.

கடன் வாங்கிய நபர் கடனை திருப்பி செலுத்தாமல் இறந்து விட்டால் என்றால் அவர் மேல் உள்ள சொத்துக்களில் இருந்து நாம் கொடுத்த மதிப்பை எடுத்துக் கொள்ளலாம்.

Previous articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் உற்சாகமும் பிற்பகலுக்கு மேல் பொறுப்பும் உண்டாகும் நாள்!!
Next articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் மன நிம்மதியும் உண்டாகும் நாள்!!