மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து! 

0
249
#image_title

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து! 

நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நாம் தற்போது மாறிவரும் உணவு பழக்கத்தினால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

நமக்கான மருந்து நம்மிடமே உள்ளது என்பதை உணர்ந்து உணவே மருந்து தத்துவத்தின் அடிப்படையில் நம்மிடம் உள்ள மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

1. கொடுக்காப்புளியில் வைட்டமின் சி, பி1, பி2, பி3, கே, ஏ, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், புரதம், சோடியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன.

குடலில் இருக்கும் சிக்கலான நோய்க்கிருமிகளான ஈகோலை, சிக்கலா நோய்க் கிருமிகளை தடுக்க உதவும்.

2. தர்பூசணி ரத்த ஓட்டத்தை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து விடும். அத்துடன் ரத்தக்குழாயில் படியக்கூடிய கழிவுகளை சுத்தப்படுத்தும் பெரும் பணியை செய்கிறது.

3. அசைவ உணவுகளை சாப்பிட்ட பின்னர் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பது செரிமான பிரச்சனைகளை தவிர்க்க உதவும். உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் அனைத்து நேரங்களிலும் வெந்நீர் அருந்துவது நல்லது.

4. சாதத்தில் சுக்கு, மிளகு, சீரக பொடி சேர்த்து பின்னர் உருக்கிய நெய் சேர்த்து சாப்பிட செரிமான பிரச்சனைகளே வராது. சாதம் வேக வைக்கும் குடிநீரில் நெய் சேர்த்து குடித்து வந்தால் சாப்பிட்டவுடன் உடலில் வரும் வயிற்று வலி, வாயு தொல்லையை போக்கும்.

5. பால் புகட்டும் தாய்மார்கள் தினமும் 3 வேளை பசும்பாலில் தேனும்,4 பூண்டு பற்களும் சேர்த்து பருகி வர தாய்ப்பால் தாராளமாக சுரக்கும்.

6. வெந்நீரில் 4 மிளகு, சிறிதளவு சீரகம் சேர்த்து கசாயம் செய்து தேன் கலந்து பருகி வர தொண்டைக்கட்டு குணமாகும்.

7. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு வெள்ளை பூசணி சிறந்த அருமருந்தாகும். வெள்ளை பூசணி சாறை தினமும் அருந்தி வந்தால் உடல் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரையும் வெளியேற்றி விடும். உடல் சூடும் குறையும்.

8. நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர நரம்புகள் நன்றாக பலப்படும்.

9. ஆஸ்துமா, சளி உள்ளவர்களுக்கு முருங்கைக்கீரை சூப் நல்லது. ஆண் பெண் இருபாலரின் மலட்டுத்தன்மையை போக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

Previous articleஇவர்களுக்குத்தான் ரூ 1000 உரிமைத் தொகை? முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட தகவல்!
Next articleதிருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா?