இனிமேல் தனியார் பள்ளிகளில் இவற்றை கேட்க கூடாது!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

0
83
Don't listen to these things in private schools anymore!! School Education Department action order!!
Don't listen to these things in private schools anymore!! School Education Department action order!!

இனிமேல் தனியார் பள்ளிகளில் இவற்றை கேட்க கூடாது!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!! 

பள்ளிகளில் இனிமேல் ஜாதி மதம் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களிடம் கேட்க கூடாது. என தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் போன்ற விவரங்களை கேட்கவே கூடாது என கல்வித்துறை அங்குள்ள தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு சாதி, மதம் போன்ற சமூக  விவரங்கள் தேவை இல்லை என அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.

பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது அவர்களின் பெயர் மற்றும் குடும்ப விவரங்கள் பெற்றோர் சமர்பிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மாணவர் விவரங்களை சேகரிக்கும் வழக்கம் இருந்தது.  இந்த நிலையில் பள்ளி மாற்று சான்றிதழில் தங்களது சாதியை குறிப்பிட விரும்பவில்லையெனில் மதம் இல்லை என குறிப்பிட அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அரசு உத்தரவை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பிறப்பு சான்றிதழில் பெயரை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் எனக் கூறியது. ஆனால் சாதி, சமூகம் போன்ற விவரங்ககளை கூறத் தேவை இல்லை என கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவு முறையாக பின்பற்ற படவில்லையென கல்வித்துறை அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பல பள்ளிகள் இன்னும் அந்த விவரங்களை கேட்பதாக கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் இருந்து நீதிமன்ற உத்தரவை பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்த தமிழக அரசாணை பிறப்பித்து உள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்த மாணவர்களின் சாதி, மதம் குறிப்பிடும் நடைமுறை உள்ளது.  இதைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் நேரு தாஸ் என்பவர் முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் ஒன்றினைத் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில பள்ளிகளில் ஜாதி மதம் போன்ற விவரங்களை குறிப்பிடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

 

Previous articleஹீரோவாக அவதாரம் எடுக்கும் புகழ்!! யோகி பாபு இடத்தை விரைவில் பிடித்துவிடுவார் என்று புகழாரம்!!
Next articleஅண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள மோடியின் விவகாரம்!!