சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்!
சர்க்கரை நோயை குணப்படுத்த அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் மூலமாக இதனை சரி செய்து கொள்ளலாம்.
தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை நாம் சரி செய்யாமல் விடுவதன் காரணமாக இதய நோய், நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ,இரத்த குழாய் பாதிப்பு ,மூளை நரம்பு பாதிப்புகள் ஏற்படும்.
இதனை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளின் மூலமாக சரி செய்து கொள்ளலாம். அதனை இந்த பதிவின் மூலமாக காணலாம்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த தானிய வகைகள் மற்றும் பச்சை காய்கறிகள் ஆகும்.
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்கள் சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸ் ஆக மாற்றும் வேகத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலமாக உடலில் அதிகப்படியான கொழுப்புகளின் அளவை குறைத்து மற்றும் சர்க்கரை நோய் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளான கீரைகள், பூண்டு, கேரட் ,வெண்டைக்காய், முட்டைக்கோஸ், தக்காளி, பீன்ஸ், ஆகிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயை குறைக்கும் பல வகைகளான ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, பப்பாளி பழம், எலுமிச்சம் பழம் ஆகிய பலவகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் .
இந்த வகையான காய்கறிகள் மற்றும் பல வகைகளில் வைட்டமின், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகப்படியாக நிறைந்துள்ளது. இதை நம் உடலில் உள்ள தமனிகளில் நச்சு ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. தமனிகளில் கொழுப்பு படியாதவாறு பாதுகாக்கிறது. இதன் விளைவாகவும் சர்க்கரை நோயின் அளவை குறைக்கலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நெல்லிக்கனியில் அதிகப்படியான ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை பெரும்பாலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது மற்றும் சர்க்கரை நோயை குணப்படுத்தும் முதன்மையான உணவாகும்.
இதனை ஜூஸ் செய்து வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் குடித்து வருவதன் மூலமாகவும் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும்.