தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு?
தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
1956-ல் மொழிவாரியாக தமிழகம் பிரிக்கப்பட்டதிலிருந்தே பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
1956-ம் ஆண்டு 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்திருக்கிறது.
இவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின் போது தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் அந்த சமயம் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் மாவட்டங்களையும் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை பரிசீலித்து தற்போது திமுக ஆட்சியில் 2024 -ல் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாகும் என அறிவுப்பு வெளியாகியுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜனவரி 26 குடியரசு தின விழாவில் அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சில நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
மாவட்டங்களை பொருத்தவரையில், கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டமாகவும், திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டமாகவும், கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டமாகவும், தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டமாகவும், சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டமாகவும் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளன.
இவற்றுள் விருத்தாசலம் மாவட்டத்தில் விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர் தாலுக்காக்கள் அமையும்.
செய்யாறு மாவட்டத்தில் ஜமுனாமரத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வெண்பாக்கம், வந்தவாசி தாலுக்காக்கள் அமையும்.
பொள்ளாச்சி மாவட்டத்தில் கிணத்துகடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, உடுமலை, மடத்துகுளம் தாலுக்காக்கள் இருக்கும்.
கும்பகோணம் மாவட்டத்தில் கும்பகோணம்,
பாபநாசம்,
திருவிடைமருதூர், ஆகிய தாலுக்காக்கள் அமையும்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை,
காரைக்குடி, புதுக்கோட்டை,
பொள்ளாச்சி, நாமக்கல், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
மேலும் பெருந்துறை, சென்னிமலை, அவினாசி, அரூர், பரமத்தி வேலூர், ஊத்தங்கரை, செங்கம்
போளூர், செஞ்சி, காட்டுமன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, பொன்னமராவதி, தம்மம்பட்டி, அந்தியூர், சங்ககிரி, வத்தலகுண்டு , ஆண்டிப்பட்டி, ஜக்கம்பட்டி, உத்தமபாளையம், வேடசந்தூர், முதுகுளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
படப்பை, ஆண்டிமடம்
திருமானூர், வேப்பந்தட்டை, தியாகதுருகம், வேப்பூர், உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
எனவே, 2024 -ல் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 43 ஆக உயரும்.