காந்திக்கு பதில் ராமர் படம் பொறித்த 500 ரூபாய் தாள்..? உண்மையா? உருட்டா?

0
281
#image_title

காந்திக்கு பதில் ராமர் படம் பொறித்த 500 ரூபாய் தாள்..? உண்மையா? உருட்டா?

இந்திய சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து அதாவது 1969 ஆம் ஆண்டு “தேசத் தந்தை மகாத்மா காந்தி” அவர்களின் படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் தாளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரிசர்வ் வங்கி, ரூபாய் தாளின் முன் பக்கத்தில் காந்தி படத்தை மட்டுமே அச்சடித்து வெளியிட்டு வருகிறது. நோட்டுகள் மாறினாலும் காந்தி படம் மட்டும் மாறாமல் இருந்து வரும் நிலையில் தற்பொழுது காந்தி படத்திற்கு பதில் ராமர் படம் பொறிக்கப்பட்ட 500 ரூபாய் தாளை ரிசர்வ் வங்கி வெளியிடப்போவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.

உண்மையாவே ரூ.500 தாளில் ராமர் படம் பொறிக்கப்படுமா? ஏன் இவ்வாறு செய்தி பரவுகிறது?
வரலாற்று சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான உத்தரபிரதேசம் அயோத்தி ராமர் கோயில் திறப்பு வருகின்ற திங்கள்(ஜனவரி 22) அன்று நடக்க இருக்கின்றது.

நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவை காண நாட்டின் முக்கிய தலைவர்கள், விஐபிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது. பலத்த பாதுகாப்புடன் இந்த சுப நிகழ்வு நடக்க உள்ளது.

இந்நிலையில் ராமர் கோயில் திறப்பையொட்டி காந்தி படம் பொறிக்கப்பட்ட 500 ரூபாய் தாளில் இனி ராமர் படம் இடம்பெறும். இதை ஜனவரி 22 அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வெளியிட இருக்கிறார் என்ற செய்தி உலா வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த தகவல் உண்மையா என்றால் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று மத்திய அரசின் PIB FACT CHECK நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ராமர் படம் பொறிக்கப்பட்ட ரூ.500 ரூபாய் தாள் வெளியிடுவது குறித்த எந்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. இந்த தகவல் முற்றிலும் வதந்தி மட்டுமே. யாரும் இதை நம்ப வேண்டாம் என்று PIB FACT CHECK நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.