- வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற இந்த மோர் ஒரு கிளாஸ் குடிங்கள்!ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் வாயுத் தொல்லையை சந்தித்து வருகின்றனர். உருளைக்கிழங்கு, முட்டை, அவரை உள்ளிட்ட பல பொருட்கள் வாயுக்கள் நிறைந்தவையாக இருக்கிறது.
இதுபோன்ற வாயு நிறைந்த பொருட்களை அதிகளவு உண்பதினால் உடலில் வாயுக்கள் தேங்கி விடுகிறது. இதனால் முதுகு பிடிப்பு, வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே வாயுத் தொல்லையில் இருந்து காத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை ஒருமுறை மட்டும் பின்பற்றுங்கள் போதும்.
தேவையான பொருட்கள்:-
மோர்
பெருங்காயத் தூள்
சீரகத் தூள்
இந்துப்புசெய்முறை:-
ஒரு கப் தயிரை மோர் போல் கடைந்து எடுத்துக் கொள்ளவும். பாக்கெட் தயிரை தவிர்த்து மாட்டு பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை பயன்படுத்துவது நல்லது.
அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை மோரில் கலக்கவும்.
அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் எடுத்து மோரில் கலக்கவும். வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்ற பெருங்காயத் தூள் சிறந்த தீர்வாக இருக்கும்.
பிறகு இறுதியாக சிறிது இந்துப்பு சேர்த்து கலக்கி குடிக்கவும். மோரில் கலக்கப்பட்ட பொருட்கள் வயிற்றில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. தேவைப்பட்டால் சிறிது ஓமத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். மருந்து மாத்திரையை விட இந்த பொருட்கள் மூலம் வாயுத் தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.