உங்கள் கருமை நிற முகம் பளபளப்பாக மாற தினமும் இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

உங்கள் கருமை நிற முகம் பளபளப்பாக மாற தினமும் இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு கிடைக்கும்!!

Divya

உங்கள் கருமை நிற முகம் பளபளப்பாக மாற தினமும் இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு கிடைக்கும்!!

ஆண் பெண் என்று அனைவருக்கும் சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். இதற்காக இரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நபர்கள் அதை உடனடியாக தவிர்க்க பாருங்கள். இரசாயனம் கலந்த பொருட்கள் உடனடி பலன் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். இதனால் இருந்த சரும அழகும் கெடும் நிலை உருவாகி விடும். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது.

சரும பராமரிப்பிற்கு இயற்கை முறையில் சிறந்த தீர்வாக இருப்பது பழச்சாறு தான். அதிலும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் வைத்து தயாரிக்கப்படும் ஜூஸ் தொடர்ந்து அருந்தி வந்தோம் என்றால் சருமம் மற்றும் உடல் ஆரோக்யமாக இருக்கும். இந்த ஜூஸ் நம் உடலுக்கு வைட்டமின் A, B1, B2, B3, B6, B9, C, E, K , இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் செலினியம் உள்ளிட்ட பல சத்துக்களை வாரி வழங்குகிறது.

தேவையான பொருட்கள்:-

*ஆப்பிள் பழம் – 1

*பீட்ரூட் – 1

*கேரட் – 1

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கழுவி கொள்ளவும். அடுத்து அதன் தோலை நன்கு சீவிக் கொள்ளவும். பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும்.

இவை சரும பாதிப்பிற்கு மட்டும் அல்ல அல்சர், குடல் புண், வயிற்று புண் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது. அதேபோல் கண் எரிச்சல், கண் வலி மற்றும் பார்வை திறன் குறைபாடு உள்ளிட்ட கண் பாதிப்புகளை குணமாக்க இந்த இந்த ஜூஸ் பெரிதும் உதவுகிறது.