கோடையில் உடல் சூடு தணிந்து குளுகுளு வென்று இருக்க இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

0
241
#image_title

கோடையில் உடல் சூடு தணிந்து குளுகுளு வென்று இருக்க இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

குளிர்காலம் முடிந்து தற்பொழுது வாட்டி வதைக்கும் கோடை காலம் தொடங்கிவிட்டது.நாளுக்கு நாள் உயரும் வெப்பத்தால் உடல் அதிகளவு சூடாகிறது.அதிகப்படியான வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள தர்பூசணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.

தர்பூசணியில் வைட்டமின்கள்,நீர்ச்சத்து,ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் குளுமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தர்பூசணி(விதை நீக்கப்பட்ட துண்டுகள்) – 1 கப்
2)ஐஸ்கட்டி
3)தண்ணீர்
4)சர்க்கரை

செய்முறை:-

ஒரு கீற்று தர்பூசணியை தோல் மற்றும் விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு அதனுள் இருக்கும் விதையை நீக்கி விட்டு மிக்ஸி ஜாரில் போடவும்.பிறகு அதில் ஐஸ்கட்டி மற்றும் ஓரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு சுத்து விடவும்.இதனை தொடர்ந்து சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இதை கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும்.

Previous articleவெயில் காலத்தில் உங்கள் முகம் வெள்ளையாக இருக்க இதை மட்டும் அங்கு பயன்படுத்துங்கள்!! நம்புங்க 100% ரிசல்ட் கொடுக்கும்!!
Next articleபங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் இத்தனை நன்மைகள் உண்டாகும்!!