ஒரே நாளில் உங்கள் இருமலை விரட்டி அடிக்க இதனை ஒரு டம்ளர் குடியுங்கள்!!

ஒரே நாளில் உங்கள் இருமலை விரட்டி அடிக்க இதனை ஒரு டம்ளர் குடியுங்கள்!!

நமது உடலில் ஏற்படும் சிறு சிறு உபதைகளுக்கே மருத்துவரை நாட வேண்டிய சூழல் வந்துவிட்டது ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அதற்கு எளிய முறையில் தீர்வு கண்டுவிடலாம் இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

அந்த வகையில் நாம் அனைவரும் கட்டாயம் சந்திப்பதில் ஒன்றுதான் இருமல். காய்ச்சல் சளி இதனை அடுத்து இருமல் உள்ள நிலையில் இது ஏற்பட்டு விட்டால் சிரப் என ஆரம்பித்து பலவற்றையும் மக்கள் குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

ஆனால் இந்த பதிவில் வருவதை தெரிந்து கொண்டால் அவர்களுக்கு இவ்வாறு சிரப் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

தேவையான பொருட்கள் வெந்தயக்கீரை

உலர் திராட்சை (10)

சீரகம் 1/2 ஸ்ப்பூன்

செய்முறை

ஒரு டம்ளர் அளவிற்கு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு சிறிதளவு வெந்தயக்கீரை அதனுடன் சேர்க்க வேண்டும்.

மேற்கொண்டு நாம் எடுத்து வைத்துள்ள உலர் திராட்சை மற்றும் சீரகம் இவை இரண்டையும் சேர்க்க வேண்டும்.

ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். இதனை கசாயமாக எடுத்து வர விரைவில் இருமல் குணமாகும்.