இதை 7 நாட்களுக்கு குடிங்க!! மனதைக் கவரும் அளவுக்கு உடல் எடை குறையும்!!

Photo of author

By CineDesk

இதை 7 நாட்களுக்கு குடிங்க!! மனதைக் கவரும் அளவுக்கு உடல் எடை குறையும்!!

உடலில் கொழுப்பு அதிகமாகி உடல் எடை அதிகரித்து அதனால் ஏராளமானோர் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியும் சிலர் தீர்வு கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகின்றனர்.

வயிற்றில் இருக்கக்கூடிய கொழுப்புகள் கை, கால் தொடை பகுதியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் என அனைத்தையும் ஒரே வாரத்தில் கரைத்து உடலை மிகவும் ஒல்லியாக அழகாக மாற்றுவதற்கான ஒரு சுலபமான மருத்துவ குறிப்பை இரண்டே பொருளை பயன்படுத்தி எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை
ஆப்பிள்
பட்டை

பொருட்களின் பயன்கள்:
எலுமிச்சை:
எலுமிச்சை நம் உடல் எடையை குறைப்பதில் ஒரு மிகுந்த பங்காற்றுகிறது. இதில் இருக்கக்கூடிய பைபர் மற்றும் சிட்ரிக் அமிலம் ஃப்ரீ ரேடிக்கல்லில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய பெட்டிங் நமக்கு பசி ஏற்படுவதை தவிர்க்கிறது.

ஆப்பிள்:
ஆப்பிளும் உடல் எடையை குறைப்பதில் மிகுந்த பங்கினை வகிக்கிறது. தினமும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் பசி எடுக்காமல் நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஆப்பிளில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ சத்தானது நம்முடைய கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பட்டை:
பட்டையில் ஆன்டி பாக்டீரியல் குணங்கள் அதிகமாக இருப்பதால் இது நம் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது. மேலும் இது நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு உதவுகிறது.

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் இரண்டு எலுமிச்சை பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

2. இதனுடன் ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதில் அரை லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

3. பிறகு இதில் ஒரு இன்ச் அளவு பட்டையை சேர்த்துக் கொள்ளவும்.

4. இதை ஒரு பத்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த பானத்தை ஒரு வாரம் வரை நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். இதை தினமும் காலை அல்லது மதிய வேலை உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு இதை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு குடித்து வர உடம்பில் இருக்கக்கூடிய கொழுப்புகள் அனைத்தும் முற்றிலுமாக கரைந்து உடல் மெலிதாக காணப்படும்.