உடல் சூடு குறைய இதை மட்டும் குடியுங்கள்!!
உணவுப் பொருள்கள் சூடாக இருக்க வேண்டும் என்பது பலரின் தேர்வு. ஆனால், உடல் சூடு அனைவருமே குறைக்க வேண்டியது.
உடல் சூடு ஏற்படுத்தும் அசௌகர்யங்களும் பிரச்னைகளும் பல. பல உடல் உபாதைகளுக்கு நேரடி காரணமாகவும் இது இருக்கிறது.
உடல் சூட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்க்கலாம். பொதுவாக, உடலில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கு எடுக்கும் மருந்துகள், வாழ்க்கை முறையில் சரியான அக்கறைமின்மை, மெனோபாஸ், வசிக்கும் சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உடல் சூட்டை அதிகப்படுத்தலாம்.
உடல் சூடு இருப்பவர்கள் முதலில் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். தண்ணீரை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலில் சூடு குறைவதுடன், இன்னும் பல பிரச்னைகளும் குறையும்.
அடிக்கடி காற்றாட வெளியே செல்லுங்கள். வீட்டுக்குள்ளேயே அல்லது அலுவலகம் உள்ளேயே, புழுக்கத்திலேயே இருக்காதீர்கள். அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொண்டு இயற்கையான குளிர்ந்த காற்றை உடலுக்குக் கொடுங்கள்.
குளிர்ந்த நீர் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளியுங்கள். உடல் சூடு இருப்பவர்கள் வெந்நீர், சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கும்போது, வெளிப்புறமாக உடல் சூடு அதிகமாவதைத் தடுக்கலாம்.
உடல் சூட்டை தணிக்க கூடிய ஒரு மூலிகை மருந்தை பற்றி இங்கு காண்போம்.
நாட்டு மருந்து கடைக்கு சென்று கோஷ்டம் எனப்படும் மூலிகை மருந்தை வாங்கிக் கொள்ளவும்.
அதில் 5 கிராம் அளவு மூலிகை மருந்து எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு பசும்பால் விட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
இதை இரவு தூங்குவதற்கு முன் 200 மில்லி லிட்டர் பாலில் கலந்து பருக வேண்டும்.இவ்வாறு செய்வதால் உடல் சூடு தணிந்து உடல் நன்றாக குளிர்ச்சி பெறும்.