விமான நிலையத்தில் புதிய முறையை கொண்டுவந்துள்ள துபாய்

Photo of author

By Parthipan K

துபாயில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சர்வதேச விமான நிலையத்தில் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல தொடங்கியுள்ளனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விமானத்திற்கு செல்லும் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டின் முகப்பு பகுதியை ‘ஸ்மார்ட் கேட்’ நுழைவு பகுதியில் உள்ள உணரும் கருவியில் வைத்தால் போதும்.

தானியங்கி முறையில் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு குடியேற்ற பிரிவை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். அதாவது கண்ணாடி கதவு தானாக திறந்து வழிவிடும். இதன் காரணமாக வரிசையில் நின்று காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. பயணிகளின் வசதியை மேம்படுத்தி அவர்கள் எளிமையான முறையில் பயணம் செய்ய இந்த ‘ஸ்மார்ட்’ முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.