இதன் காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது!

0
242

இதன் காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது!

உள் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒருசில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை உள் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஇந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு!
Next articleபள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சியை கிளப்பும் பகீர் தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here