பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சியை கிளப்பும் பகீர் தகவல்

0
73
school-van-accident-son-killed-mother-blame
school-van-accident-son-killed-mother-blame

பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சியை கிளப்பும் பகீர் தகவல்

சென்னையில் பள்ளி வாகனம் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனைத்தொடர்ந்து அம்மாணவனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பின்மையே காரணம் என சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதுவரை சிறுவனின் உடலை வாங்க மாட்டேன் என்றும் மறுத்து வந்தார்.

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அவரது மனைவி இருவரும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு தீக்சித் என்ற 7 வயது மகன் உள்ளார்.அவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.நேற்று அவர் படித்து வந்த பள்ளி வளாகத்தில் அவர் மீது பள்ளி வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து இதற்கு காரணமான அனைவரையும் கைது செய்யவேண்டும் என்றும் அதுவரை மாணவனின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவரது தாயார் மறுத்து வந்தார்.இதனையடுத்து வேனின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார் மற்றும் பள்ளியின் தாளாளர் ஜெய சுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் வேனில் இருந்து குழந்தைகளை இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்த பின்னர் மாணவனின் உடலை வாங்கி சென்றனர்.அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு மற்றொரு சோதனையும் நடந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவனின் தந்தை இந்து மற்றும் அவரது தாயார் கிறிஸ்துவர்.அந்த அடிப்படையில் அவனின் உடலை புதைக்க அருகிலுள்ள ஆர்.சி சபையில் கேட்டதற்கு சந்தா கட்ட வேண்டும் அதனால் உடலை புதைக்க முடியாது என்று மறுத்து விட்டதாகவும்,அதே போல CSI சபையிடம் கேட்டதற்கு நீங்கள் சி.எஸ்.ஐ தானா என்பதை உறுதி செய்ய மதுரையில் இருந்து சான்று வாங்கி வர வேண்டும் என்று கூறி மறுத்து விட்டதாகவும் அவரது தாயார் ஜெனிபர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தில் சாதி அடிப்படையில் பிரிவினைகள் இருப்பதாக பேசும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்த பிரச்சனையை கண்டும் காணாமல் கடந்து செல்வது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.