மாதவிடாய் வலிக்கு ஈஸியான டிப்ஸ்!!உடனடியாக வலி பறந்து போய்விடும்!!
மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என்று ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மாதவிடாய் காலத்தில் கருமுட்டை வெளியேறும் போது கர்ப்பப்பையை சுற்றி இருக்கக்கூடிய தசைகள் இருக்கம் அடைவதால் இந்த மாதவிடாய் வலி ஏற்படுகிறது.
இந்த வலியை சரி செய்ய நிறைய பேர் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பலர் கூறி வருகின்றனர்.
இவ்வாறு மாதவிடாய் வலியின்போது நாம் வீட்டில் இல்லாமல் வெளியே இருந்தால் அப்போது எப்படி இந்த வலியை சரி செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் மாதவிடாய் வலியை நாம் உணர ஆரம்பித்த உடனேயே இதற்கான பதற்றத்தை முற்றிலுமாக குறைக்க வேண்டும்.
என்னால் இந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியும் உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த வலி இருக்கிறது என்று தைரியமாக உணர வேண்டும். மாதவிடாய் வலியின்போது அதை சரி செய்வதற்காக சிலர் கூல்ட்ரிங்ஸ் பருகி வருவர் ஆனால் மாதவிடாய் காலங்களில் அதை கண்டிப்பாக குடிக்கக் கூடாது அதற்கு பதிலாக, எலுமிச்சை ஜூஸ், இளநீர் இவற்றை குடித்தால் நம் உடலின் நீர்ச்சத்தை அதிகப்படுத்தி கொள்ளலாம்.
மாதவிடாய் காலங்களில் நீர் ஆகாரங்களை அதிகம் உண்டு வரலாம். மேலும் மாதவிடாய் காலங்களில் வாழைப்பழம் மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடம்பிற்கு மிகுந்த சக்தியை அளிக்கும். இந்த பழங்கள் கிடைக்காத பட்சத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாம்.
இதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். மாதவிடாய் திடீரென்று வராது சில அறிகுறிகள் தெரியும். இதற்கான முன்னெச்சரிக்கையாக நாப்கினை நம்முடன் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும்.