5 பைசா செலவின்றி கொசுக்களை சுலபமாக விரட்டும் வழிகள்!

Photo of author

By Divya

5 பைசா செலவின்றி கொசுக்களை சுலபமாக விரட்டும் வழிகள்!

உயிரை குடிக்கும் கொசுக்களை செலவின்றி வீட்டை விட்டு நிரந்தரமாக விரட்டும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

கற்பூரம்…

*பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் 4 எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி 2 கற்பூரத்தை போட்டுக் கொள்ளவும்.

*மீதம் இரண்டு கற்பூரத்தை இடித்து தூளாக்கி தண்ணீர் கலந்து வீட்டின் ஒரு மூலையில் வைத்து விடவும். இவ்வாறு செய்தால் வீட்டில் கொசுக்கள் நடமாட்டம் இருக்காது. கற்பூரம் கலந்த தண்ணீர் ஆவியான பிறகு மீண்டும் புதிதாக அதேபோல் செய்து வைக்கவும்.

பிரிஞ்சி இலை…

*வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரத்தை நுணுக்கி கலந்து வைத்துக் கொள்ளவும்.

*ஒரு பிரிஞ்சி இலை எடுத்து அதில் வேப்ப எண்ணெய் கலவையை தடவி பற்ற வைக்கவும். பிரிஞ்சி இலை எரியும் பொழுது வரும் வாசனை கொசுக்களை விரட்டி அடிக்கும்.

வேப்பிலை…

*ஒரு கிண்ணத்தில் 1/2 கிளாஸ் தண்ணீர், 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், 1 ஸ்பூன் ஷாம்பு, 1 கொத்து வேப்பிலை சேர்த்து கலந்து விடவும். இதை வீட்டின் கொசு நடமாட்டம் இருக்கும் மூலையில் வைத்தால் கொசுத்தொல்லை நீங்கும்.

பூண்டு…

*அகல் விளக்கில் 1 பல் பூண்டு, 2 இலவங்கம், 1 சூடம் மற்றும் 3 வேப்பிலை சேர்த்து பற்ற வைத்தால் அதில் இருந்து வரும் வாசன் கொசுக்களை விரட்டும்.