பொங்கல் பண்டிகை எதிரொலி! கிடு கிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்!

Photo of author

By Parthipan K

பொங்கல் பண்டிகை எதிரொலி! கிடு கிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்!

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களே இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகளவு இருந்ததால் மக்கள் வெளியே சென்றால் வேகமாக தொற்று வைரஸ் பரவும் அபாயம் இருந்தது அதனால்  அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகளை நிறுத்தப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

அதனால் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவையானது மீண்டும் தொடங்கியது.கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில் பேருந்து மற்றும் ஆம்னி பேருந்தின் கட்டணம் உயர்ந்தது.ஆம்னி பேருந்துகளில் ஐந்து மடங்கு மேல் கட்டணம் உயர்ந்தது. தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம் தான்.

அரசு பல்வேறு வகையான உத்தரவுகளை பிறபித்தாலும் சில ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ஆம்னி பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்கு 1500 ரூபாயாக வசூல் செய்யப்பட்டு வந்த கட்டணம் தற்போது 3800 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் செல்ல உள்ள நிலையில் தற்போது ஆம்னி பேருந்து கட்டணம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுபோல பல வழித்தடங்களுக்கு கட்டணம் உயர்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.