மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை

0
138
Edappadi Palaniswami Property List
Edappadi Palaniswami Property List

மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை

கொரோனா இரண்டாம் அலையானது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.முன்பு இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அரசும் கொரோனா தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எதிர்கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் ஆளும் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும்,முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.அந்த வகையில் தற்போது மருத்துவ பட்டதாரிகளுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது.அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர்.

இன்றைய கொரோனா நோய்த்தொற்றின் அவசர நிலையை கருத்திற்கொண்டு மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு , உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Previous articleகங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்!
Next articleபோலி ரெம்டிசிவர் மருந்து விற்பனை! வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி!