எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

Photo of author

By Anand

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சுதந்திர தினத்தையொட்டி பாரத பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுகாக உரையாற்றினார்.அதே போல தமிழகத்தில் தமிழக முதல்வர் கொடியேற்றி தமிழக மக்களுக்காக உரையாற்றினார்.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் முன்னாள் தமிழக முதல்வரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது.

உலகின் மிக வலிமையான ஜனநாயகம் உருவாவதற்கு வித்திட்ட இந்திய சுதந்திர தின நன்னாளில் மக்கள் யாவரும் அகிம்சை வழியை பின்பற்றி ஒற்றுமை ஓங்கப்பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன். தியாக உள்ளங்களை நினைவு கூர்வோம், இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் என அதில் தெரிவித்துள்ளார்.