ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

0
200
#image_title

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆன்மீக சுற்று பயணம் மேற்கொள்ள ஆந்திர மாநிலம் செல்ல இருக்கிறார்.

தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்டி ஆளும் திமுக அரசை கலங்கடித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
கடந்த சில தினங்களாக அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றிய செய்தி தான் அனைவரிடத்திலும் பேசப்பட்டு வருகிறது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசி கூட்டணியில் சலசலப்பு ஏற்றப்படுத்தினார்.அதுமட்டும் அல்லாமல் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அதிமுக – பாஜக இடையே மாறுபட்ட கருத்து நிலவியது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவரை மாற்றினால் தான் கூட்டணியில் அதிமுக நீடிக்கும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் மேலிட பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.ஆனால் அதனை அலட்சியப்படுத்திய மேலிட பாஜகவை அதிர வைக்கும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாகவும்,இனி எப்பொழுதும் பாஜவுடன் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களின் கூட்டணி முறிவு குறித்த அறிவிப்பால் பாஜக மட்டுமல்ல தமிழகத்தை ஆளும் திமுகவும் சற்று பீதியில் இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.இப்படி அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்பொழுது ஆந்திர மாநிலம் விரைய இருக்கிறார்.அங்கு விஜயவாடாவின் இந்திரநீலத்திரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்கை அம்மன் அலையத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ள இருக்கிறார்.இந்த துர்கை அம்மன் அலையம் கிருஷ்ணா நதி கரையோரத்தில் அமைந்துள்ளது.இது சாதாரண கோவில் வழிபாட்டு தளம் இல்லை.இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.தொட்ட காரியம் வெற்றிகரமாக முடியும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.

இதனால் கூட்டணி முறிவை தொடரந்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஸ்ரீ துர்கை அம்மனை வழிபட விஜயவாடா செல்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

அதனை தொடர்ந்து உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா நகருக்கு சென்று அங்கு ஸ்ரீ துர்கை அம்மனை வழிபட்டு விட்டு பின்னர் ஏழுமலையானை தரிக்க இருக்கிறார.இதனை தொடர்ந்து இன்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்ப இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.அனல் பறக்கும் அரசியல் பரபரப்பிற்கிடையே எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆன்மீக பயணம் தற்பொழுது அனைவரின் மத்தியிலும் கவனம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!
Next article2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!