ஸ்டாலின் கட்டி காத்த மொத்த குடும்ப மானமும் போச்சு?… நறுக்குன்னு நாக்கை புடுங்குற மாதிரி கேட்ட எடப்பாடியார்…!

Photo of author

By CineDesk

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பாபநாசம், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்து வெளுத்து வாங்கினார்.

ஸ்டாலின் எந்த கூட்டத்தில் பேசினாலும் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி தான் பேசுகிறார். தூங்கும் போது கூட ஸ்டாலின் என்னையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். 4 வருடத்திற்கு முன்பு இதே ஸ்டாலின், அதிமுக இன்னும் 6 மாதத்தில் ஆட்சியை இழக்கும் என பேசினார். தற்போது வெற்றிடம் என்ற பேச்சு மறைந்து அதிமுக அரசு 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக அரசு எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அதனால் தான் தமிழகம் வெற்றி நடை போடுவதாக பெருமிதத்துடன் கூறினார்.வெற்றி நடை போடும் தமிழகம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஸ்டாலின் கொதிக்கிறார். அரசாங்க பணத்தை நாங்கள் விரயம் செய்கிறோம் என குற்றச்சாட்டுகிறார். நாங்கள் தனி விளம்பரம் செய்யவில்லை, மக்களுக்கு செய்த திட்டங்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறோம். அதில் தவறு இருந்தால் நாங்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறோம்.

திமுக ஆட்சி காலத்தில் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அது நாட்டுக்காக நடத்தப்படவில்லை, கருணாநிதி குடும்பத்திற்காக நடத்தப்பட்ட ‘குடும்ப விழா’. அதற்காக பல கோடிகளை கருணாநிதி குடும்பம் செலவிட்டது. நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து, 42 ஆண்டுகள் அதிமுகவில் உழைத்து படிப்படியாக முதலமைச்சராக உயர்ந்துள்ளேன். ஆனால் ஸ்டாலின் உழைத்து வரவில்லை, ஏனென்றால் அவருடைய அப்பா திமுக தலைவர் என்பதால் அந்த செல்வாக்கில் எம்.எல்.ஏ. ஆனவர்.

திருச்சியில் நடத்திய மாநாட்டில் ஏதோ சினிமா ஹீரோ மாதிரி வருகிறார். இரண்டு பக்கம் லைட் எரிய, பட்டாசு வெடிக்க என்ட்ரி கொடுக்குறாரு. ஸ்டாலின் ஹீரோ அல்ல, ஜீரோ. நடிக்கவா போறாரு மக்களுக்கு சேவை தானே வந்திருக்காரு. சினிமாவைப் போல் கெட்டப்பில் வரும் ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தான் என சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கினார்.