தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
106
#image_title

தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நம் அழகை வெளிப்படுத்துவதில் நம் தலை முடிகளுக்கு முக்கிய பங்குண்டு.ஆனால் இந்த தலை முடியை வளர்ச் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.தலையில் பொடுகு,அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டால் தலை முடி உதிர்வு அதிகம் இருக்கும்.இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்:-

*நிலவேம்பு இலை – 1 கைப்பிடி

*தயிர் – 1 தேக்கரண்டி

*கற்றாழை ஜெல் – தேவையான அளவு

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி அளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 மணி நேரம் ஊற விடவும்.

பின்னர் 1 கற்றாழை மடல் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.அதில் உள்ள ஜெல்லை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஓரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 1 கைப்பிடி அளவு நிலவேம்பு இலைகளை சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் அதனுடன் 1 தேக்கரண்டி அளவு தயிர் சேர்த்து ஒரு சுத்து விடவும்.பின்னர் அதில் ஊற வைத்த வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

பிறகு இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலையை குளிர்ந்த நீரால் அலசவும்.இவ்வாறு வரம் ஒருமுறை செய்து வந்தால் பொடுகு தொல்லை முழுவதுமாக நீங்கி முடி நன்றாக வளரத் தொடங்கும்.

மற்றொரு தீர்வு:-

ஒரு கைப்பிடி அளவு மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்பிலையை எடுத்து வெயிலில் உலர்த்த வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1/2 கப் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

எண்ணெய் சூடேறியதும் அதில் உலர்த்தி வைத்துள்ள வேப்பிலையை சேர்த்து கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பூண்டு பற்களை சேர்த்து அரைக்கவும்.

அதை கொதித்து கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய் + வேப்பிலையில் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.பிறகு அடுப்பை அணைத்து விடவும்.பின்னர் அதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.அதில் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் 2 சேர்த்து கரைத்து கொள்ளவும்.

இவை ஆரிய பிறகு முடிகளில் வேர்களின் படும் படி நன்கு மஜாஜ் செய்து 45 நிமிடங்கள் காத்திருந்து பின் ஷாம்பு பயன்படுத்தி முடியை அலசவும்.

இப்படி தொடர்ந்து செய்து வர முடி உதிர்தல்,பேன்,ஈறு,பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகள் விரைவில் சரியாகும்.

Previous article1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!!
Next articleஇப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!!