80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

0
114

80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

தற்பொழுது வயதானவர்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக இந்த முடக்கு வாதம் இருக்கின்றது.இவை ஒரு வகை முழங்கால் மூட்டு வலி நோயாகும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.இந்த முடக்கு வாத வலி நாளடைவில் அதிக படியான சோர்வு,எடை இழப்பு,மூட்டு எழும்புகளில் வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.இவற்றை இயற்கை முறையில் சரி செய்ய எளிய வழிகள் பல இருக்கின்றது.இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடக்கு வாதம்,எலும்பு வலி முற்றிலும் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

பசு நெய் -1 ஸ்பூன்

கசகசா -1 ஸ்பூன்

சோம்பு -1 ஸ்பூன்

கொப்பரை தேங்காய் -சிறிய துண்டு (காய வைத்தது)

கற்கண்டு -தேவைக்கேற்ப

பால் – 1 டம்ளர்

செய்முறை:-

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து கொள்ள வேண்டும்.அதில் 1 ஸ்பூன் பசு நெய் ஊற்றி மிதமான தீயில் கசகசாவை சேர்க்க வேண்டும்.பிறகு 1 டம்ளர் பால் ஊற்றி அதில் சோம்பு,தேங்காய் போன்றவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.சர்க்கரை நோயாளிகள் கற்கண்டை சேர்க்காமல் இருப்பது நல்லது.பிறகு இவை சூடு தணிந்த பிறகு ஒரு டம்ளருக்கு மாற்றி பருக வேண்டும்.தொடர்ந்து இந்த ட்ரிங்க்கை எடுத்து வருவதன் மூலம் வலுவிழந்த மூட்டு மற்றும் எலும்புகள் இரும்பு போல் வலுப்பெறும்.

* கசகசாவில் நார்ச்சத்து,மாங்கனீசு,கால்சியம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை இருக்கின்றது.

*சோம்பில் பொட்டாசியம்,கால்சியம்,அயன்,மெக்னீசியம்,செலினியம் அதிகளவு இருக்கின்றது.

*கொப்பரை தேங்காயில் வைட்டமின்,மினரல்ஸ்,அயன் போன்றவை இருப்பதினால் முழங்காலில் வலி ஏற்படுவதை தடுக்கின்றது.

*கற்கண்டு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இவை சளி,தொண்டை பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றது.

Previous articleகரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து… இந்த மூன்று பொருள்கள் போதும்…
Next articleஇரண்டு ஏலக்காயை தட்டி பாலில் போட்டு குடித்து பாருங்கள்… இதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்…