இனி அவை உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினாலும் நடவடிக்கை பாயும்!!
மக்களால் மக்களுக்காக மக்களே தேர்தெடுக்கும் உறுப்பினர்களே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாவர்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுகாக பேசவே மக்கள் பிரதிநிதியாக அவைகளுக்கு செல்கின்றனர்.
அவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் அவைகளில் பேசவோ, வாக்களிக்கவோ லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் மேலும் அவர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபத்கள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், அவை உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் இருந்து விலக்கு கோரவும் முடியாது என கோரியுள்ளனர்.
முன்னதாகவே ஜந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இதே தீர்ப்பை வழங்கிய நிலையில் மேல்முறையிடு செய்த நிலையில் உச்சநீதிமன்றம் மீண்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது.