இந்தியாவின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் காலமானார்

இந்திய அணியின் முன்னாள் தர போட்டியாளர்களில் ஒருவரான ரஜிந்தர் கோயல் தனது 77 வயதில் காலமானார். இவரது மறைவிற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கங்குலி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ஹரியானாவைச் சேர்ந்த ரஜிந்தர் கோயல் இடது கை பந்துவீச்சாளராக 27 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியுள்ளார். மேலும் 157 முதல் தர போட்டிகளில் கலந்துகொண்டு 750 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதல் தரப்பு விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவராக இருந்த ராஜிந்தர் கோயல் இதுவரை ஒரே போட்டியில் 5 விக்கெட் எடுப்பதை 53 முறையும், 17 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். பல ஆண்டுகள் முதல்தர போட்டிகளில் விளையாடியும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு தரப்படவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். இவரது காலத்தில் பிஷன் சிங் பேடி என்னும் ஸ்பின்னர் தனக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ரஜிந்தர் கோயல் 77 வயதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் காலமானார். இவரது இறப்பிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.