நூலிலையில் வென்ற இங்கிலாந்து வார்னரின் அரைசதம் வீண்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் முடிந்துவிட்டது.

தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று 50 ஓவர் போட்டிகள் விளையாட உள்ளன. இதில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மோதும் முதல் போட்டி சவுதம்டனில் இந்திய நேரப்படி இரவு 10.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மாலன் 66 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக வார்னர் 58 ரன்கள் குவித்தார்.