பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பிளே-ஆஃப் போட்டிகள்

0
177
பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆண்டுதோறும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் பிளே-ஆஃப்ஸ் மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் 1 ஆகியவை நவம்பர் 14-ந்தேதியும், எலிமினேட்டர் 2 நவம்பர் 15-ந்தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 17-ந்தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
Previous articleநூலிலையில் வென்ற இங்கிலாந்து வார்னரின் அரைசதம் வீண்
Next article2.70 கோடியை நெருங்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here