நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!

0
213
#image_title

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!

இன்று மார்ச்20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே தமிழகத்தில் இன்று தொடங்குகின்றது வேட்பு மனு தாக்கல்.

சனிக்கிழமையிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் வருகின்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜுன் பதினாறாம் தேதி முடிவடையவுள்ளது, எனவே அனைத்து மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் தொடங்கி ஜுன் ஒன்றாம் தேதி வரை ஏழுக்கட்டங்களாக நடைபெற உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எனவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து கட்சிகளும் இன்று மார்ச் 20ஆம் தேதி முதல் காலை 11மணி முதல் 3வரை தேர்தல் அலுவலகத்தில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம், வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 27ஆம் தேதி கடைசி நாளாகும், 3மணிக்கு மேல் தேர்தல் அலுவலகத்தில் யாருக்கும் அனுமதி இல்லை, மேலும் வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன் ஐந்து நபர்கள் மட்டுமே வரவேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என அறிவித்துள்ளது, மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகவும் அறிவித்துள்ளது.

Previous articleஎப்பொழுதும் தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருட்கள் போதும்!
Next articleஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி!