மூன்று  மொழிகளில் பட வாய்ப்பு!! பிரபல நடிகைக்கு அடித்த  ஜாக்பாட் !!

0
80
Film opportunity in three languages!! Famous actress hit the jackpot !!
Film opportunity in three languages!! Famous actress hit the jackpot !!

மூன்று  மொழிகளில் பட வாய்ப்பு!! பிரபல நடிகைக்கு அடித்த  ஜாக்பாட் !!

த்ரிஷா சமீபத்தில் வெளியான வரலாற்று திரைப்படமான பொன்னின் செல்வன் படத்தில் குந்தவை  தேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1999 ஆம் ஆண்டு பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி திரைப்படத்தில் நாயகியின் தோழியாக அறிமுகமானவர்.

இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் முதலில் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் காதாநாயகியாக அறிமுகமானவர்.  இவர் தற்போது வரை ரசிகர்கள் மனத்தில் நீங்க இடம் பிடித்து உள்ளார்.  மேலும் இவர் தளபதி விஜய், விக்ரம், சூர்யா, அஜித் போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தற்போது  தளபதி விஜய்யுடன் லியோ படத்தில் 14 வருடங்களுக்கு பின் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதனையடுத்து அவர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இவருக்கு தெலுங்கு திரைப்பட நடிகராக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

அதனையடுத்து  அவர் தற்போது மலையாள படங்களில் கமிட்டாகி வருகிறார். அதனையடுத்து இரண்டு இயக்குனர் அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில் நடிக்கயுள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக டோவினோ நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.  அந்த படத்தின் பெயர்  ஐடென்டிட்டி என்றும் இருவரும் இணைந்து  நடிக்கவிருக்கிறார்கள் என்றும் தகவல் வந்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் ஆவலாக இருக்கிறார்கள். மேலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கிறது.