காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்!

Photo of author

By Savitha

காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்!

காசோலை மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்த நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னர் வகையறா படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்பு, அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்கும் வகையில் வழங்கிய காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதையடுத்து நடிகர் விமலுக்கு எதிராக கோபி சென்னையில் உள்ள 11 வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், முதல் சாட்சியை விமல் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யாமல், அவரது சாட்சியம் முடிந்த பின், முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்யக் கோரி விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விமல் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்டதாக கூறி நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.பின்னர் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25 ம தேதி நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.