எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!!

Photo of author

By CineDesk

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!!

CineDesk

Fire accident in AIIMS hospital!! Patients in Adarchi!!

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!!

டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை தான் எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எண்டாஸ்கோபி என்னும் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பான ஒரு அறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் பற்றி எரியக்கூடிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தீ கட்டுக்குள் வந்தாலுமே அறையின் உள்ளே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே, இதனை சரி செய்யும் முயற்சியில் தீ அணைப்பு துறை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

எனவே, விரைவில் தீ அணைக்கப்பட்டு மருத்துவமனை கூடிய விரைவில் தயாராகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.